Friendship Fortnight 2020: பெண்ணே நீ

ff20xWe open Friendship Fortnight 2020 with a poem written and shared by Kutti Revathi, பெண்ணே நீ. The poem describes a woman and her journey through life.

 

 

பெண்ணே நீ

~ குட்டி ரேவதி

பெண்ணே நீ கடலின் மீது மேகங்களூடே கொட்டும்
சூரியனின் மழையைப் போல வெளிச்சமாய் இருக்கிறாய்

பெண்ணே நீ அலைதோறும் அலைதோறும்
மாயாத உணர்வுகளைக் கிளறும் அன்றாடப்பணி செய்கிறாய்

பெண்ணே நீ முத்தங்களை விதைத்து
கரையேகும் ஆமைகளைப் போல கருமுட்டையின் கனம் இறக்குகிறாய்

பெண்ணே நீ ஒவ்வொரு முறை அவிழும் உன் புடவையிலும்
கண்ணீரைச் சேமிக்காது அன்பைச் சேகரிக்கிறாய்

உன் கண்ணீரின் துளிகள் உதிர்ந்த வேப்பம்பழங்களைப் போல
கவனிப்பாரற்று இறைந்து கிடக்கின்றன

பெண்ணே வலது கண்ணில் கடலைச் சுமக்கிறாய்.
இடது கண்ணில் சூன்யத்தை விரிக்கிறாய்

பெண்ணே நீ காகங்கள் கரையும் அதிகாலைகளைச் செய்கிறாய் 

பெண்ணே வியர்வையின் நதிகளை நீ ஒன்று சேர்க்கிறாய்
கண்ணீர்த்துளிகளை அதில் கலக்கிறாய்

பெண்ணே நீ வானம் முட்டும் மலையேறி
அங்கிருந்து கவனம் தப்பாமல் ஆறென இறங்குகிறாய்

வேட்கையைத் தருகிறாய் விதைகளைத் தின்கிறாய்
மீன்களைக் கொய்து ஒரு வானம் செய்கிறாய்

உடலை இரண்டாய்ப் பிரிக்கிறாய் உயிர் ஒன்று
என்று திரிக்கிறாய்

நட்சத்திரக்கும்பலில் தனியே மின்னுகிறாய்
தடாகத்தின் கரையில் தாமரையாய் முதுகை நிமிர்த்துகிறாய்

பெண்ணே நீ பறவையென பிறக்கிறாய்
ஒரு சொல்லும் நினைவின்றி ஒன்றாகத் துறக்கிறாய் பேருலகம் செய்கிறாய்

உடலுக்குள் புரவிகள் வளர்க்கிறாய் திசைகள் எங்கும் அவைமீது விரைகிறாய்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s